உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெஞ்சை பதற வைக்கும் தி.மலை நிலச்சரிவு காட்சி | Tiruvannamalai Landslide video | fengal cyclone

நெஞ்சை பதற வைக்கும் தி.மலை நிலச்சரிவு காட்சி | Tiruvannamalai Landslide video | fengal cyclone

நெஞ்சை பதற வைக்கும் தி.மலை நிலச்சரிவு காட்சி | Tiruvannamalai Landslide video | fengal cyclone திருவண்ணாமலையில் நடந்த நிலச்சரிவு சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உட்பட 200 பேர் தீவிர மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளனர். இதற்கிடையே திருவண்ணாமலையின் இன்னொரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலையில் சோமவார குளத்தின் பின்பகுதியில் நடந்துள்ளது. கனமழை காரணமாக மலையை அரித்துக்கொண்டு சேரும் சகதியுமாக வெள்ளம் பாய்ந்தது. ஒரு கட்டத்தில் பாறை, கட்டுமானம் சரிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வசிப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த மலை பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகள் உள்ளன. நிலச்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை