உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இடம் பிடித்த பெஞ்சல் | Cyclone Fengal

50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இடம் பிடித்த பெஞ்சல் | Cyclone Fengal

50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இடம் பிடித்த பெஞ்சல் | Cyclone Fengal | Very slow moving | Meteorologists shock | TN cyclone | வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரியை பதம் பார்த்தது. பின்னர் அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலால் பெய்த கனமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இப்போது மழை இல்லாவிட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 50 ஆண்டுகால தமிழக புயல் வரலாற்றில் இது போன்றதொரு மெதுவாக நகர்ந்து கரை கடந்த புயல் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக புயல்கள் எப்போதும் 250 முதல் 300 கி.மீ வரை 10 முதல் 12 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். ஆனால் பெஞ்சல் புயல் 3 கி.மீ வேகத்தில் தான் பயணித்தது. 500 கி.மீ தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது. புயல்கள் அது உருவான நாளில் இருந்து 3வது நாளில் வலுவிழக்கும். ஆனால் நவம்பர் 25ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான 4 நாட்கள் கழித்து, அதவாது நவம்பர் 29ம் தேதிதான் புயலாக உருமாறியது. பொதுவாகவே, கடற்கரை பகுதியில் இருந்து ஒரு புயல் கடந்து விட்டால் அது வலுவிழக்கும். ஆனால், 9 மணி நேரம் ஒரே இடத்தில் இருந்து, கடலில் உள்ள ஈரப்பதத்தை நன்றாக உள்வாங்கிக் கொண்டு அதன் பின்னரே மெதுவாக கரை கடக்க ஆரம்பித்து இருக்கிறது. பல மாவட்டங்கள் அதிக மழை பொழிவை எதிர்கொண்டதற்கு இதுவே காரணம் என்கிறார் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர். வானிலை தரவுகளை மேம்படுத்தப்பட்ட முறையில் கணிக்க, சரியான சிஸ்டம் நம்மிடம் இல்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ