உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்காவில் கோயிலுக்கு தீ வைப்பு: தெய்வ சிலைகள் சேதம் temples-set-on-fire

டாக்காவில் கோயிலுக்கு தீ வைப்பு: தெய்வ சிலைகள் சேதம் temples-set-on-fire

டாக்காவில் கோயிலுக்கு தீ வைப்பு: தெய்வ சிலைகள் சேதம் temples-set-on-fire-centre-burnt-down-in-dhaka வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. தாக்குதல்களும் நடைபெற்றன. இஸ்கான் மையங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இஸ்கான் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடந்தன. இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்யக் கோரி இந்துக்கள் போராடி வருகின்றனர். இஸ்கான் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் இஸ்கான் மையங்களை குறி வைத்து தாக்குதல் நடக்கின்றன. டாக்கா மாவட்டத்தில் உள்ள தூர்Dhour கிராமத்தில் இஸ்கான் மையம் செயல்படுகிறது. இங்குள்ள ஸ்ரீராதாகிருஷ்ணன் கோயில் மற்றும் ஸ்ரீலஷ்மி நாராயணன் கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் சமூக விரோதிகள் தீ வைத்தனர். தெய்வ சிலைகள் மற்றும் கோயிலுக்குள் இருந்த பொருட்கள் எரிந்தன. இஸ்கான் அமைப்பு மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. இடைக்கால அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. கைது செய்யப்பட்டுள்ள துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் நிலையும் கவலைக்குரியதாக இருக்கிறது என இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா துணை தலைவர் ராதாராமன் தாஸ் தெரிவித்துள்ளார். இச் செயலுக்கு மத்திய கல்வி துறை இணை அமைச்சரும், மேற்கு வங்க பாரதிய ஜனதா தலைவருமான சுகந்தா மஜூம்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். வழிபாட்டு தலத்தின் மீதான வெறுப்புணர்வு மன்னிக்க முடியாத செயல். இச் செயலை செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்திட வங்கதேச இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை