திருவண்ணாமலை மீது ஏறவே முடியாதா? பகீர் தகவல் | Tiruvannamalai | Tiruvannamalai Landslide
திருவண்ணாமலை மீது ஏறவே முடியாதா? பகீர் தகவல் | Tiruvannamalai | Tiruvannamalai Landslide திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப திருவிழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் விழா டிசம்பா் 13ல் நடக்க உள்ளது. ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் நாளன்று காலை 2,500 பக்தா்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கி 2,668 அடி உயர மலையின் உச்சிக்குச் செல்ல அனுமதி அளிப்பது வழக்கம். இந்த வருடம் மலையேறும் பக்தா்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து உடல்தகுதியை பரிசோதித்த பிறகு அனுமதி அட்டைகள் வழங்க என மாவட்ட நிா்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் பக்தர்களை மலைமீது ஏற அனுமதிப்பதே சந்தேகம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. மகா தீப மலையின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் மலையேற அனுமதிப்பது தொடர்பாக புவியியல் வல்லுநர் குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வு குழுவின் அறிக்கையை பொறுத்தே பக்தர்கள் மலைமீது ஏற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார். திருவண்ணாமலை அடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் இறந்த நிலையில் மலை மீது எடுக்கப்பட்ட நிலச்சரிவின் காட்சிகள் இன்னும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.