₹50 கோடியில் புதுப்பொலிவு பெறும் வண்டியூர் கண்மாய் சுந்தரம் பூங்கா | Vandiyur Kanmai|Sundaram park
மதுரை மாநகரின் மைய பகுதியில் 550 ஏக்கரில் கடல்போல் பரந்து விரிந்து அமைந்துள்ளது வண்டியூர் கண்மாய். இதை ஆழப்படுத்தி பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்காததால் கண்மாய் சுருங்கிகொண்டே வந்தது. கண்மாயில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறை ஆண்டு தோறும் ஏலம் விடுவது வழக்கம். ஏலம் எடுக்கும் கான்ட்ராக்டர் தண்ணீரை வெளியேற்றி மீன்பிடிப்பதால் ஆண்டு முழுதும் தண்ணீர் இன்றி வறண்டு சாக்கடைகள் கழிவுகள் கலந்து கடும் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு கண்மாயை துார் வாரி ஆகாய தாமரை மீண்டும் வளராத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இப்போது மாநகராட்சி சார்பில் கண்மாயை ஆழப்படுத்தி அதன் கரையோரத்தில் உள்ள சுந்தரம் பூங்காவை 50 கோடி ரூபாயில் சுற்றுலா தலமாக்கும் பணி துரிதமாக நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சுந்தரம் பூங்காவை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.