உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா-மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்!India Myanmar Border|Fencing Project

இந்தியா-மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்!India Myanmar Border|Fencing Project

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் மற்றும் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகின்றனர். நமது வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை மியான்மருடன் 1,643 கி.மீ தூரம் எல்லையை பகிர்கின்றன. இதன் வழியாக, லட்சக்கணக்கான அகதிகள் நமது நாட்டுக்குள் நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதேபோல் மியான்மருடன் 400 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்ளும் மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கும், கூகி பழங்குடியினருக்கும் கடந்த ஆண்டு மோதல் வெடித்ததில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்கு, மியான்மரில் இருந்து வரும் ஊடுருவல்காரர்கள் தான் காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டி வருகிறது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ