உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் எமர்ஜென்சி லேண்டிங்; உயிர்தப்பிய பயணிகள் | AirIndia Flight| ChennaiAirport | EmergencyLan

சென்னையில் எமர்ஜென்சி லேண்டிங்; உயிர்தப்பிய பயணிகள் | AirIndia Flight| ChennaiAirport | EmergencyLan

சென்னையில் எமர்ஜென்சி லேண்டிங்; உயிர்தப்பிய பயணிகள் | AirIndia Flight| ChennaiAirport | EmergencyLanding சென்னையில் இருந்து கோவைக்கு இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக 1.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 128 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 136 பேர் சென்றனர். நடுவானில் பறந்தபோது, விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். விமானத்தை அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டன. விமானம் 2.20 மணிக்கு அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பதற்றமும் பீதியுமாய் விமானத்தில் இருந்து இறங்கினர். அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். எந்திர கோளாறை சரி செய்யும் பணிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். கோளாறு சரி செய்ய முடியாவிட்டால் பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் விமானி, எந்திரக்கோளாறை கண்டுபிடித்ததால் 136 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எந்திர கோளாறால் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ