உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem

50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்! Hooch Production | TN Police | Salem

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே க.ராமநாதபுரத்தில் விவசாய தோட்டத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சொரிப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்தில் சோதனை செய்தனர். அதே ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சண்முகம் என்பவர் சாராய ஊறல் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 50 லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சண்முகம் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சண்முகம் தனது பேரனின் காதணி விழாவுக்காக சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. சண்முகத்திடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ