உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிரேனில் தூக்கப்பட்ட கார் மாயமான டிரைவர்: என்ன நேர்ந்தது

கிரேனில் தூக்கப்பட்ட கார் மாயமான டிரைவர்: என்ன நேர்ந்தது

சென்னை துறைமுகத்தில், இந்திய கடலோர காவல் படைக்காக, டவேரா கார் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. துறைமுகத்தில், ஜவகர் டாக் jawahar dock என்ற இடத்திற்கு இந்திய கடலோர காவல் படை வீரர் ஜோகேந்திர காண்டா காரில் சென்று கொண்டு இருந்தார். கொடுங்கையூரை சேர்ந்த டிரைவர் முகமது ஷாஹி காரை ஓட்டினார். திடீரென காரில் பிரேக் பிடிக்கவில்லை. தாறுமாறாக ஓடிய கார், கடலுக்குள் பாய்ந்தது. கடலோர காவல்படை வீரர் ஜோகேந்திர, காயங்களுடன் காரில் இருந்து தப்பி வெளியே வந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் கடலில் மூழ்கியது. கிரேன் உதவியுடன் காரை வெளியே எடுத்தனர். ஆனால், காரில் டிரைவர் முகமது ஷாஹி இல்லை. அவர் கடலுக்குள் மூழ்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ