Ex முஸ்லிமா? பயங்கரவாதியா? யார் இந்த அப்துல் | German christmas market attack | Taleb al-Abdulmohsen
Ex முஸ்லிமா? பயங்கரவாதியா? யார் இந்த அப்துல் | German christmas market attack | Taleb al-Abdulmohsen உலகை அதிர வைத்த ஜெர்மனி கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் நடந்த கார் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சவுதி அரேபியாவை சேர்ந்த எக்ஸ் முஸ்லிம் டாக்டர் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது. உண்மையில் அவர் எக்ஸ் முஸ்லிமா (Ex-Muslime) அல்லது மத அடிப்படைவாதியா அல்லது தீவிர ஷியா முஸ்லிமா அல்லது பயங்கரவாதியா என ஜெர்மனி மட்டும் இன்றி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சூறாவளி வாதம் கிளம்பி இருக்கிறது. ஜெர்மனியில் கார் அட்டாக்கில் அப்படி என்ன நடந்தது? உண்மையில் சவுதி டாக்டர் தலேப் அல் அப்துல்மோசன் யார்? அவரது பின்னணியில் இருக்கும் மர்மங்கள் என்ன? என்பது பற்றி பார்க்கலாம். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் மக்டக்பெர்க் நகரம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் தான் கார் அட்டாக் நடந்தது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதிக் கொண்டிருந்தனர். அந்த மக்கள் கூட்டத்துக்குள் மின்னல் வேகத்தில் ஒரு பிஎம்டபிள்யூ கார் புகுந்தது. 400 மீட்டர் தூரம் சீறி பாய்ந்து, வழிநெடுக்க நின்ற மக்களை தூக்கி எறிந்தது. பச்சிளம் குழந்தை உட்பட துடிக்க துடிக்க 5 பேர் இறந்தனர். 200 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 100 பேர் கை முறிந்தும், கால் முறிந்தும் உடலில் பல இடங்களில் கொடுங்காயங்கள் ஏற்பட்டும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்னும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது வெறும் விபத்து அல்ல. சவுதி அரேபியாவை சேர்ந்த டாக்டர் தலேப் அல் அப்துல்மோசன் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். அவரை போலீசார் கைது செய்து விட்டனர். அவரது பின்னணி தான் இப்போது புயலை கிளப்பி உள்ளது. அடிப்படையில் அவர் சவுதி அரேபியாவை சேர்ந்த முஸ்லிம். 2006ல் ஜெர்மனிக்கு அகதியாக வந்தார். 2016ல் அவருக்கு அகதிக்கான குடியுரிமையை ஜெர்மனி வழங்கியது. சவுதி டாக்டர் தன்னை தீவிர எக்ஸ் முஸ்லிம் என்று அடையாளப்படுத்தினார். அதாவது, இஸ்லாம் மதத்தில் இருந்து வெளியேறியவர்களை தான் எக்ஸ் முஸ்லிம் என்பார்கள். இப்படி உலகம் முழுதும் பல லட்சம் எக்ஸ் முஸ்லிம்கள் உள்ளனர். எக்ஸ் முஸ்லிம்கள் தனிப்பிரிவு போல் செயல்படுகின்றனர். தாங்கள் வசிக்கும் ஊர்களில், நாடுகளில் தங்களுக்கென்று தனி அமைப்பை உருவாக்கி பிணைப்பை ஏற்படுத்தி உள்ளனர். உலக அளவில் சோசியல் மீடியாவிலும் வலுவான அமைப்பை உருவாக்கி ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுகின்றனர். முஸ்லிம் நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான எக்ஸ் முஸ்லிம்கள் வெளியேறி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி இருக்கின்றனர். இஸ்லாம் முறைப்படி நடக்கும் ஆட்சி, இஸ்லாமை மதிக்காத, பின்பற்றாத முஸ்லிம்களுக்கு மரண தண்டனையை பரிந்துரைக்கிறது. இதில் இருந்து தப்பிக்கவே பிற நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர். இஸ்லாமில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பதையும், இஸ்லாமை விமர்சிப்பதையும் எக்ஸ் முஸ்லிம்கள் தீவிரமாக மேற்கொள்கின்றனர். அப்படி தான் தன்னை எக்ஸ் முஸ்லிம் என்று ஜெர்மனி கார் அட்டாக்கின் மூளையாக செயல்பட்ட சவுதி டாக்டர் சொல்லிக்கொண்டார். அவரது சோசியல் மீடியா பதிவுகளும் பெரும்பாலும் எக்ஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே இருந்தன. பொதுவெளியில் பேட்டி கொடுக்கும் போதும் தன்னை உறுதியான எக்ஸ் முஸ்லிம் என்பார். ஜெர்மனியில் உள்ள எக்ஸ் முஸ்லிம் சமூகத்தினரிடம் டாக்டர் அப்துல்மோசன் பெரிய அளவில் பரீட்சையமாகி இருந்தார். ஆனால், அவர் உண்மையில் எக்ஸ் முஸ்லிம் அல்ல; வெறிப்பிடித்த முஸ்லிம்; பயங்கரவாதியாக கூட இருக்கலாம் என்று ஜெர்மனியில் உள்ள எக்ஸ் முஸ்லிம்கள் இப்போது கூறி வருவது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அவர்கள் கூறியது: தான் ஒரு எக்ஸ் முஸ்லிம் என்பதால் சவுதியில் துன்புறுத்தப்பட்டேன் என்று சொல்லி தான் ஜெர்மனியிடம் அடைக்கலம் கேட்டார். அதனால் தான் அவருக்கு ஆதரவளிக்க ஜெர்மனி அரசு அகதிக்கான குடியுரிமை வழங்கியது. ஆனால் அவர் உண்மையில் எக்ஸ் முஸ்லிம் இல்லை. அகதி குடியுரிமையை பெறுவதற்காகவே எக்ஸ் முஸ்லிம் பிம்பத்தை பயன்படுத்தி இருக்க வேண்டும். தன்னை இஸ்லாமின் எதிரி என்கிறார். என்னை போல் இஸ்லாத்தை விமர்சிக்கும் ஒரு நபர் இந்த உலகத்திலேயே இல்லை. என் மீது சந்தேகம் என்றால், என்னை பற்றி அரேபியர்களிடம் கேட்டுப்பாருங்கள் என்று அடிக்கடி சொல்வார். அப்படி என்றால் அவர் ஏன் கிறிஸ்தவர்கள் நிரம்பி இருக்கும் கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் இப்படியொரு கொடிய தாக்குதலை நடத்த வேண்டும். எக்ஸ் முஸ்லிம் என்றால் நிச்சயம் இப்படி செய்யமாட்டார்கள். எக்ஸ் முஸ்லிம்களுக்கு எந்த மதத்தினரோடும் விரோதம் கிடையாது. ஆனால் இஸ்லாமில் தீவிரமாக செயல்படுபவர்களால் தான் இப்படியொரு கொடிய தாக்குதலை நடத்த முடியும். உண்மையில், சன்னி முஸ்லிம் பெரும்பான்மையாக வசிக்கும் சவுதியில் இருந்து தப்பி ஓடி வந்த ஷியா முஸ்லிம் தான் டாக்டர் அப்துல்மோசன். அவர் மீது ஐரோப்பிய நாடுகளுக்கு போதை கடத்தியது, பெண்களை கடத்தியது போன்ற குற்றங்கள் உள்ளன. அதில் இருந்து தப்பிக்கவும் குடியுரிமை பெறவுமே அவர் எக்ஸ் முஸ்லிம் வேஷத்தை அணிந்து இருக்கிறார் என்று ஜெர்மனி எக்ஸ் முஸ்லிம்கள் கூறினர். சிலர் டாக்டர் அப்துல்மோசன் சவுதி அரசுக்காக வேலை பார்க்க வந்த ரகசிய நபர் என்கின்றனர். அதாவது, சவுதியில் இருந்து எக்ஸ் முஸ்லிம்களாக வெளியேறிய பெண்களை நைசாக மீண்டும் சவுதிக்கு மீட்டு வரும் அசைமென்ட் அவருக்கு கொடுக்கப்பட்டது என்கின்றனர். வெளியில் அவர் தன்னை ஒரு எக்ஸ் முஸ்லிம் என்று காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவர் தீவிர முஸ்லிமாகவே இருந்தார். எக்ஸ் முஸ்லிம்களாக இருக்கும் பெண்களிடம் பெர்சனலாக மெசேஜ் செய்து, அவர்களை வசைபாடுவது அப்துல்மோசனுக்கு வழக்கம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். டாக்டர் அப்துல்மோசன் பயங்கரவாதியாக இருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2016ம் ஆண்டு இதே போன்று ஒரு கிறிஸ்மஸ் மார்க்கெட்டில் கொடூர தாக்குதல் நடந்தது. மின்னல் வேகத்தில் புகுந்த டிரக், 16 பேரை கொன்றது. 250க்கும் மேற்பட்டவர்களை காயம் அடைய செய்தது. அந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ் பயங்கரவாதிகள். அதே மாடலில் நடந்திருக்கும் இந்த கார் தாக்குதலும் பயங்கரவாத தாக்குதலாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் எக்ஸ் முஸ்லிம் என்ற போர்வையில் ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், மொத்த எக்ஸ் முஸ்லிம்கள் மீதும் தவறான கண்ணோட்டம் வரும். இனி யாராவது எக்ஸ் முஸ்லிம் என்று கூறி குடியுரிமை கேட்டால், அதை ஜெர்மனி நிராகரிக்க வேண்டும் என்பதற்காக கூட இந்த சதி செயலை அப்துல்மோசன் செய்திருக்ககூடும் என்கின்றனர். ஜெர்மனியின் எதிர்கட்சியான ஏஎப்டி கட்சிக்கு அப்துல்மோசன் தீவிர ஆதரவு தெரிவித்து வந்தார். அந்த கட்சியின் முக்கிய கொள்கையே அகதிகளை அனுமதிக்க கூடாது என்பது தான். சவுதியில் இருந்து அகதியாக ஜெர்மனியில் குடியேறிய அப்துல்மோசன், அகதிகளுக்கு எதிராக பேசுகிறார் என்றால் நிச்சயம் அவரிடம் ஏதோ சதி திட்டம் உள்ளது என்றும் எக்ஸ் முஸ்லிம்கள் ஆதங்கப்படுகின்றனர். தன்னை எக்ஸ் முஸ்லிம் என்று காட்டிக்கொண்டு பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த அப்துல்மோசன், ராச்சிட் என்பவருக்கு பேட்டி அளிக்க மறுத்து விட்டார். ராச்சிட் எக்ஸ் முஸ்லிம்களிடம் பிரபலமானவர். மடக்கி மடக்கி கேள்வி கேட்க கூடியவர். அவரிடம் மட்டும் சவுதி டாக்டர் பேட்டிக்கு போகவே இல்லை. அவர் 2 முறை அழைத்தும், இப்போது முகம் வீங்கி இருக்கிறது பேட்டிக்கு வரவில்லை என்று மறுத்து விட்டார். கனடாவை சேர்ந்த எக்ஸ் முஸ்லிம் ஆர்வலர் யாஸ்மின் சவுதி டாக்டர் மீது பல சந்தேகங்களை கிளப்பினார். அவருடன் நான் பேசி இருக்கிறேன். அவர் மீது சந்தேகம் உண்டு. அவர் நிலையான மனிதரே இல்லை. உண்மையில் அவர் நாட்டுக்கு வெளியே எக்ஸ் முஸ்லிம் ஆர்வலர்களாக செயல்படும் சவுதி பெண்களை ஒடுக்குவதற்காக சவுதி அரசுடன் சேர்ந்து வேலை பார்த்தார் என்றார். இஸ்லாமில் Taqiyya என்று ஒரு அம்சம் உள்ளது. அதாவது, தனது சொந்த அடையாளம் குறித்து ரகசியம் காப்பது. தனது மதத்துக்காக வேலை பார்க்க போகும் பிற இடங்களில் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மத அடையாளத்தை மறைக்கலாம். அப்படி ரகசியம் காக்கும் வழிமுறைக்கு பெயர் தான் Taqiyya. இதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த நடைமுறை சிறுபான்மை முஸ்லிம்களிடையே அதிகம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் இதை பின்பற்றுவார்கள். ஷியா முஸ்லிமான டாக்டர் அப்துல்மோசன், இதே Taqiyya வழிமுறையை தான் ஜெர்மனியில் கடைபிடித்து இருக்கிறார் என்று பிரிட்டானிக்கா என்ற எக்ஸ் முஸ்லிம் கூறினார். எக்ஸ் முஸ்லிம்களினம் செல்வாக்கு பெற்ற ராச்சிட் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டினார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த அப்துல் ஷோக்கூர் என்ற நபர், தான் கிறிஸ்தவனாக மாறி விட்டேன் என்றும் தன்னை அகதியாக ஏற்று பாதுகாப்பு தரவேண்டும் என்றும் பிரிட்டனிடம் கோரினார். இதற்காக கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்நானமும் எடுத்தார். அகதியாக குடியேறிய பிறகு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். பெண் மற்றும் அவரது குழந்தைகள் மீது ரசாயன தாக்குதல் நடத்தினார். பின்னர் ஒரு நாளில் தேம்ஸ் நதியில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரு மசூதியில் இஸ்லாம் முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது தெரியவந்தது. இதை முறையை அப்துல்மோசனும் கடைபிடித்திருக்க வேண்டும் என்றார். சவுதி டாக்டர் பயங்கரவாத தாக்குதலை நடத்தப்போவதாக சமீபத்தில் ஒரு பெண் எச்சரித்து இருந்தார். ஆனால் அதை ஜெர்மனி அரசாங்கம் பெரிதாக எடுக்கவில்லை. அந்த பெண் சொன்னது இப்போது நடந்து விட்டது என்று பல தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர். இப்படி ஜெர்மனியை அதிர வைத்த சவுதி டாக்டர் அப்துல் மோசன் பற்றி மர்மமான பல தகவல்கள் உலா வருகின்றன. விசாரணையை முடித்து உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஜெர்மன் அரசு உள்ளது.