நாமக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு இன்பஅதிர்ச்சி | Namakkal | Oman | Egg Export
நாமக்கல் ஏற்றுமதியாளர்களுக்கு இன்பஅதிர்ச்சி | Namakkal | Oman | Egg Export நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தினமும் சராசரியாக 30 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியாகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் அரசு முட்டை இறக்குமதியில் கடந்த நவம்பர் மாதம் புதிய கொள்கையை கொண்டு வந்தது. 60 கிராம், அதற்கு மேல் எடை கொண்ட முட்டைகளை மட்டுமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என அறிவித்தது. இதனால் நாமக்கல்லில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்டது. கடந்த சில நாட்களாக ஓமன் நாடும் இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் ஓமன் நாட்டிற்கும் முட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் நாமக்கல் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஓமன் நாட்டின் சோகார் துறைமுகத்தில் கடந்த 10 நாட்களாக நாமக்கல்லில் இருந்து 41 கன்டெய்னர்களில் அனுப்பட்ட 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்தன. இதையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஓமன் நாட்டு அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கோழிப் பண்ணையாளர்கள், முட்டை ஏற்றுமதியாளர்கள் அச்சம் அடைய வேண்டாம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மத்திய அரசின் கோரிக்கையை தொடர்ந்து இப்போது 2 கோடி முட்டைகளையும் இறக்குமதி செய்ய ஓமன் அரசு அனுமதி அளித்துள்ளது.