திரட்டிய கூட்டம் 2 ஆயிரம்! கொடுத்த மனு 4 | Su Venkatesan MP | Madurai MP | RTI
திரட்டிய கூட்டம் 2 ஆயிரம்! கொடுத்த மனு 4 | Su Venkatesan MP | Madurai MP | RTI மதுரை மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் தலைமையில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளிப்பதாக கடந்த அக்டோபரில் 2 ஆயிரம் பேர் மதுரை கலெக்டர் ஆபிசுக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் மக்களை வீட்டிற்கு திரும்பி போக சொல்லி மனுக்களை அவரது கட்சியினர் கொண்டு சென்றதாக கூறப்பட்டது. மதுரை அண்ணாநகர் வக்கீல் முத்துக்குமார் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டார். அந்த தேதியில் இலவச வீட்டுமனை பட்டா கோரி 4 மனுக்கள் மட்டுமே வந்த தகவல் வெளி வந்தது. தன் சுய லாபத்துக்காக மக்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து ஏமாற்றியதாக எம்.பி வெங்கடேசன் மீது மதுரை கலெக்டரிடம் பாஜ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.