உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சபரிமலையில் நாளை மண்டல பூஜை; தங்க அங்கி இன்று வருகை | Sabarimala | Mandala Pooja | TDB

சபரிமலையில் நாளை மண்டல பூஜை; தங்க அங்கி இன்று வருகை | Sabarimala | Mandala Pooja | TDB

சபரிமலையில் நாளை மண்டல பூஜை; தங்க அங்கி இன்று வருகை | Sabarimala | Mandala Pooja | TDB நவம்பர் 16ல் துவங்கிய மண்டல கால சீசன், சபரிமலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. தங்க அங்கி வருகை, மண்டல பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு இன்றும், நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இன்று 50,000 நாளை 60,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இன்று மதியம் 1 மணிக்கு பின் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாது. தங்க அங்கி பம்பையில் இருந்து புறப்பட்டு, சரங்குத்தி கடந்த பின்பே பம்பையில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நடப்பு சீசனில் நேற்று முன்தினம் வரை 30.87 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 4.45 லட்சம் அதிகம். இந்த சூழலில் மண்டல பூஜையன்று காலை 7:30 முதல் 11 மணி வரை சூரிய கிரகணம் காரணமாக சபரிமலை நடை அடைக்கப்படும் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது. இது சபரிமலை சீசனை சீர்குலைக்கும் முயற்சி. இது தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது தவறான தகவல் பரப்பியவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறி உள்ளார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ