உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏசு பிறப்பை கொண்டாடிய கிறிஸ்துவ மக்கள் | Christmas festival | Special prayers in church | Tamilnadu

ஏசு பிறப்பை கொண்டாடிய கிறிஸ்துவ மக்கள் | Christmas festival | Special prayers in church | Tamilnadu

ஏசு பிறப்பை கொண்டாடிய கிறிஸ்துவ மக்கள் | Christmas festival | Special prayers in church | Tamilnadu | உலகம் முழுதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஏசு பிறந்த தத்ரூப காட்சியை மணல் மற்றும் பயோ பிளாஸ்டிக் மூலம் 17 அடி சிற்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பெசன்ட் நகர் உட்பட சென்னையில் 365 தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கொடுமையான நோய் உலகை விட்டு அகல வேண்டியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சிறப்பு கூட்டு பிராத்தனை நடந்தது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. ஏசு கிறிஸ்து பிறந்ததை காட்சிப்படுத்தும் வகையில் சிறிய குடில்கள் அமைக்கப்பட்டு அதில் தத்ரூப காட்சிகள் இடம் பெற்றன. கோவை புனித சின்னப்பர் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். புதுச்சேரி கப்ஸ் தேவாலயத்தில் பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய 3 மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குழந்தை ஏசுவின் சொரூபம் ஊர்வலமாக கொண்டுவந்து குடிலில் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் நள்ளிரவு திருப்பலி மற்றும் இயேசுபிரான் மாட்டுத் தொழுவத்தில் பிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி