உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தினம் ஒரு சம்பவத்தால் முற்றிலும் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு | Annamalai | State president

தினம் ஒரு சம்பவத்தால் முற்றிலும் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு | Annamalai | State president

தினம் ஒரு சம்பவத்தால் முற்றிலும் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு | Annamalai | State president | BJP | Anna university | Studebt abuse issue சென்னை அண்ணா பல்கலையில் படிக்கும் ஒரு மாணவனும், மாணவியும் நேற்றிரவு உணவு அருந்திய பிறகு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்னர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர், மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மாநில தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளேயே, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. அப்படி என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. அன்றாடம் படுகொலை சம்பவங்கள், போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், போலீசார், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போல் இப்போது தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. அண்ணா பல்கலை சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர போலீசும், காவல்துறைக்கு பொறுப்பான முதல்வரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை