உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென் கொரிய விமான விபத்தில் காலையில் சோக நிகழ்வு! | plane crash in South Korea | Jeju Air flight

தென் கொரிய விமான விபத்தில் காலையில் சோக நிகழ்வு! | plane crash in South Korea | Jeju Air flight

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து 175 பயணிகள், விமான ஊழியர்கள் என 181 பேருடன் ஜெஜு ஏர் பிளைட் இன்று தென்கொரியா புறப்பட்டது. தென் கொரியாவின் முவான் ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் போது லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரன்வேயில் சறுக்கி கொண்டே சென்ற விமானம் ஏர்போர்ட் கான்கிரீட் வேலி மீது மோதி தீ பிடித்தது. விமானம் உடைந்து தீப்பிடித்து வானுயர கரும்புகை எழுந்த விபத்து காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகின. சம்பவம் நடந்த உடனே மீட்பு படையினர் அலர்ட் செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன. விபத்தில் இதுவரை 62 பேர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி