உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலம் இடிந்தால் திமுக பொறுப்பேற்குமா? மக்கள் கேள்வி | Tamiraparani Bridge | DMK Flag

பாலம் இடிந்தால் திமுக பொறுப்பேற்குமா? மக்கள் கேள்வி | Tamiraparani Bridge | DMK Flag

திருநெல்வேலி, கொக்கிரகுளம் கலெக்டர் ஆபீஸ் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியார் பாலம் உள்ளது. நேற்று திமுக அமைச்சர் நேருவின் நிகழ்ச்சிக்காக ஆற்றுப்பாலத்தின் இருபுறமும் ட்ரில் மெஷின் கொண்டு ஓட்டை போட்டு, இரும்பு கம்பிகளில் கட்சி கொடிகளை ஏற்றினர். 181 ஆண்டுகள் பழமையான பாலத்தில் திமுகவினர் ஓட்டை போட்டதை கண்டித்து அதிமுகவினர் பாலத்தில் அமர்ந்து தர்ணா செய்தனர். போலீசார் பேச்சு நடத்தினர். கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டது. திமுகவினர் மீது வழக்கு பதிய மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாவிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி