உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் - கவர்னர் சந்திப்பும் அரசியல் ரியாக்சனும் | Vijay | TVK | Annamalai | VCK | ADMK

விஜய் - கவர்னர் சந்திப்பும் அரசியல் ரியாக்சனும் | Vijay | TVK | Annamalai | VCK | ADMK

விஜய் - கவர்னர் சந்திப்பும் அரசியல் ரியாக்சனும் | Vijay | TVK | Annamalai | VCK | ADMK பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து கவர்னரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதே நேரம் விஜய் கவர்னர் சந்திப்பை விசிக விமர்சித்துள்ளது. விசிக துணை பொதுச்செயலர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கை; கவர்னரை சந்தித்து முறையிடுவதை அண்ணாமலை மற்றும் பாஜ ஆதரவாளர்களை வைத்து தான் டில்லி பாஜ அரசியல் செய்வது வழக்கம். இப்போது தவெக தலைவர் விஜய்யை வைத்து அரசியல் செய்கிறது. கவர்னரை விஜய் 15 நிமிடம் சந்தித்தார். செய்தியாளர்களை பார்த்து கையசைத்தார். ஆனால் பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் எலைட் (Elite) அரசியல் என வன்னியரசு விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் தவெக தலைவர் விஜய் வெளி மாநிலங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வரட்டும் என சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ