தேஜஸ் உட்பட 15 ரயில்களின் சேவையில் மாற்றம் | Railway | Southern Railway
திருச்சி டு திண்டுக்கல் இடையே ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்கிறது. இதையொட்டி தேஜஸ் உட்பட 15 ரயில்களின் சேவையில் தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது. அதன் விவரம்; செங்கோட்டை டு மயிலாடுதுறை ரயில் வரும் 4, 7, 9, 11ம் தேதிகளில் விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லாது. நாகர்கோவில் டு மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் 9ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும் குருவாயூர் டு எழும்பூர் எக்ஸ்பிரஸ் 3,6,8,10ம் தேதிகளில் புதுக்கோட்டை திருச்சி வழியாக செல்லும்.
ஜன 03, 2025