திருச்சி நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டம் | Cemetery problem | Road block Protest | Manapa
திருச்சி நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டம் | Cemetery problem | Road block Protest | Manaparai திருச்சி மணப்பாறை தீராம்பட்டியில் குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கான சுடுகாடு உள்ளது. சுடுகாடு அமைந்துள்ள இடம் பள்ளமான பகுதி என்பதால் சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினரிடம் பல முறை முறையிட்டும் தேங்கிய மழைநீர் அகற்றப்படவில்லை. சில நாட்களுக்கு முன் இறந்தவர் சடலத்தை புதைக்க முடியாமல் மறியல் செய்தனர். அப்போது மழை நீரை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் தற்போது வரை நீரை வெளியேற்றவில்லை. இந்த நிலையில் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த பொட்டம்மாள் வயது முதிர்வால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர். மழைநீர் அப்படியே தேங்கி நின்றது. ஆத்திரமடைந்த மூதாட்டியின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நடுவே மூதாட்டியின் உடலை வைத்து மறியல் செய்தனர். மயானத்திற்கென வேறு இடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் 20 நாட்களில் மயானத்திற்கு வேறு இடம் ஒதுக்கி தருவதாக உறுதியளித்தனர். அதன் பிறகு மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மூதாட்டியின் உடலை சாலையோரம் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி அடக்கம் செய்துவிட்டு சோகத்துடன் திரும்பி சென்றனர்.