/ தினமலர் டிவி
/ பொது
/ சட்டசபை சீக்ரெட் லீக்? அப்பாவு என்ன செய்தார்? | TN Legislative Assembly Fight | Governor vs DMK Govt
சட்டசபை சீக்ரெட் லீக்? அப்பாவு என்ன செய்தார்? | TN Legislative Assembly Fight | Governor vs DMK Govt
சட்டசபையில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கவர்னர் உரையின் போது களேபரம் வெடித்தது. கவர்னர் உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி சபையில் இருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக அரசு தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக கவர்னர் குற்றம் சாட்டினார். அதே நேரம் எல்லாம் மரபு படி தான் நடந்தது என்று திமுகவினர் சொல்கின்றனர். சபையில் இருந்த அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் கவர்னர் உரையை முடக்க திமுக அரசு திட்டமிட்டு செயல்பட்டதாக குற்றம் சாட்டினர். முன்னதாக சபையில் என்ன நடந்தது என்பது பற்றி வெளியே தகவல் வெளியிடுவதற்கு அப்பாவு கட்டுப்பாடு விதித்து இருந்தார்.
ஜன 07, 2025