கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சர் செழியன் அறிவுறுத்தல்! Govi Chezhian | Minister
கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சர் செழியன் அறிவுறுத்தல்! Govi Chezhian | Minister | Education Institutes Security உயர் கல்வி நிறுவனங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தி உள்ளார். பல்கலை பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது; சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது போன்ற விரும்பத்தகாத சம்பவம், வேறு எங்கும் நடக்காமல் இருக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் கல்வி நிறுவனங்களில், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும், மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் கல்வி நிறுவன வளாகத்துக்குள் வருவோர், வெளியில் செல்வோர் குறித்த விபரங்களை, பதிவேடில் பராமரிக்க வேண்டும் வளாகத்துக்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும், அடையாள அட்டை அணிந்து இருக்க வேண்டும் அவசர காலங்களில் உதவ, காவல் துறை உருவாக்கி உள்ள, காவல் உதவி செயலி குறித்து, மாணவர்கள், மாணவியருக்கு எடுத்துரைக்க வேண்டும் கல்வி நிறுவனங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரத்தில், தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், மாணவ, மாணவியரின் ஆலோசனையை பெற்று, அதன் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தி உள்ளார்.