குடி போதையில் குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது | Tirunelveli Police | collector office
குடி போதையில் குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது | Tirunelveli Police | collector office திருநெல்வேலி போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். கலெக்டர் ஆபிசில் வெடி குண்டு இருப்பதாக மிரட்டி போனை கட் செய்தார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர். இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகத்தில் அங்குலம் அங்குலமாக தேடினர். சோதனை முடிவில் குண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் போலி என்பது தெரிந்தது. ஒருபுறம் மிரட்டல் வந்த போன் நம்பரை டிராக் செய்து விசாரித்தனர். போனில் பேசியவர் பேட்டையை சேர்ந்த செய்யது அப்துல் ரஹ்மான், வயது 40 என்பது தெரிந்தது. குடிபோதையில் இப்படி மிரட்டல் விட்டதாக ரஹ்மான் கூறியுள்ளார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.