பழனிசாமி பதவி வழக்கில் அதிரடி... கோர்ட் உத்தரவு என்ன ADMK crisis | palaniswamy case | EPS vs OPS
பழனிசாமி பதவி வழக்கில் அதிரடி... கோர்ட் உத்தரவு என்ன ADMK crisis | palaniswamy case | EPS vs OPS அதிமுக தொடர்பான உரிமையியல் வழக்குகளுக்கு தீர்வு காணும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரிக்கையை 4 வாரத்தில் பரிசீலனை செய்து முடிவெடுப்பதாக தேர்தல் கமிஷன் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கோர்ட், 4 வாரத்தில் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. கோர்ட் உத்தரவை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் கமிஷன் தனது விசாரணையை ஆரம்பித்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என்று கோரி முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத், கேசி பழனிசாமி ஆகியோர் தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். இம்மனுக்கள் மீதும் தேர்தல் கமிஷன் விசாரணையை துவங்கியது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் பரபரப்பான வாதம் முன் வைக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எதிராக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கும் நபர்கள் யாரும் அதிமுகவில் இல்லை. அவர்கள் அனைவரும் தனிப்பட்ட நபர்கள். அதுமட்டும் அல்ல, அவர்கள் கோரிக்கை வைத்த விவகாரம் தொடர்பான மனுக்கள் ஏற்கனவே ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே ரவீந்திரநாத், கேசி பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பழனிசாமி தரப்பில் வாதாடப்பட்டது. வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேர்தல் கமிஷனின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். அதற்குள் தேர்தல் கமிஷன் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.