உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தை ரவுண்டு கட்டும் போலீஸ் | Ponmudi | Iruvelpattu

பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தை ரவுண்டு கட்டும் போலீஸ் | Ponmudi | Iruvelpattu

பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தை ரவுண்டு கட்டும் போலீஸ் | Ponmudi | Iruvelpattu பெஞ்சல் புயல் பாதிப்பின் போது விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராமங்களை பார்வையிட அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி காரைவிட்டு இறங்காமல் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவர் மீதும், அவரது மகன் கௌதமசிகாமணி, அதிகாரிகள் மீது சேற்றை வீசினர். இந்த சம்பவத்தில் இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என கிராம மக்களை துன்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். விசாரணைக்கு வர வேண்டும் என எந்த தப்பு செய்யாத அப்பாவிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கின்றனர். பெண்களிடம் விசாரணை நடத்த மகளிர் போலீசார் வருவதில்லை. ஆண் காவலர்களே கையை பிடித்து இழுத்து செல்கின்றனர் என வேதனையுடன் கூறினர். பொன்முடி மீது சேறு வீசப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் போலீஸ் நடத்தும் அத்துமீறல் காட்சிகளை பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ளார். பொன்முடி வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஏழுமலை என்ற நபரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி போலீசார் மிரட்டுகின்றனர். நாட்டில் வேறு பிரச்சனையே இல்லையா? பொன்முடி சட்டையில் சேறு பட்டது தான் நாட்டின் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையா? இதே வேகத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை விசாரித்து இருந்தால் “யார் அந்த சார் ?” என கண்டுபிடித்து இருக்கலாம். இருவேல்பட்டு கிராமத்தோடு முடியவேண்டிய பிரச்சனையை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்ற விரும்புகிறாரா அமைச்சர் பொன்முடி என அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை