உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீரர்களை தெறிக்கவிட்டு நின்று களமாடிய காளைக்கு டிராக்டர்! Palamedu Jallikkattu| Madurai Jallikkattu

வீரர்களை தெறிக்கவிட்டு நின்று களமாடிய காளைக்கு டிராக்டர்! Palamedu Jallikkattu| Madurai Jallikkattu

வீரர்களை தெறிக்கவிட்டு நின்று களமாடிய காளைக்கு டிராக்டர்! Palamedu Jallikkattu| Madurai Jallikkattu| Mattu Pongal மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. 930 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். 9 சுற்றுகளாக நடந்த போட்டியில், முதல் எட்டு சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்ட 32 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் 9வது சுற்றில் காளைகளை பிடிக்க களம் இறங்கினர். breath இறுதி சுற்று மிக விறுவிறுப்பாக நடந்தது. நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் அதிகபட்சமாக 14 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு 8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளிக்கப்பட்டது. 12 காளைகளை பிடித்த மஞ்சம்பட்டி துளசிராம் 2ம் இடம் பிடித்தார். அவருக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய டூவீலர் பரிசாக வழங்கப்பட்டது. breath 11 காளைகளை அடக்கி 3ம் இடம் பிடித்த பொதும்பு பிரபாகரனுக்கு எலக்ட்ரிக் டூவீலர் பரிசளிக்கப்பட்டது. breath வீரர்களுக்கு போக்கு பிடிபடாமல் நின்று களமாடிய சந்திரப்பட்டியை சேர்ந்த விஜயா தங்கபாண்டியின் காளை முதல் பரிசு வென்றது. அந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது. சின்னப்பட் கார்த்திக்கின் காளை 2ம் இடமும், குருவித்துறை பவித்ரனின் காளை 3ம் இடமும் பிடித்தன. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 51 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !