திடக்கழிவு மேலாண்மை செய்து முடிப்பேன்: நாதக வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 66 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி, ஆதரவாளர்களுடன் வந்து மனுத்தாக்கல் செய்ய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தனியாக நடந்து சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின் பேசிய அவர், திமுக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜன 17, 2025