உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புலி சிக்கியதால் வயநாடு மக்கள் நிம்மதி! Tiger trapped in a cage | Wayanad | Kerala

புலி சிக்கியதால் வயநாடு மக்கள் நிம்மதி! Tiger trapped in a cage | Wayanad | Kerala

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பள்ளி, அமரகுனி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. கால்நடைகளை வேட்டையாடிய புலியை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு உத்தரவு கிடைத்தது. ஆனால் புலி கண்ணுக்கு சிக்காமல் போக்கு காட்டியதால் வனத்துறைக்கு பின்னடைவு ஏற்பட்டது. புலியை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். நேற்று இரவு துப்புரா பகுதியில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் போக்கு காட்டிய புலி அப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை