உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டை உலுக்கிய கொல்கத்தா டாக்டர் சம்பவத்தில் தீர்ப்பு kolkatta doctor case| RG kar verdict|

நாட்டை உலுக்கிய கொல்கத்தா டாக்டர் சம்பவத்தில் தீர்ப்பு kolkatta doctor case| RG kar verdict|

நாட்டை உலுக்கிய கொல்கத்தா டாக்டர் சம்பவத்தில் தீர்ப்பு kolkatta doctor case| RG kar verdict| sanjay roy மேற்கு வங்கம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி டக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான். காவல்துறையில் தன்னார்வலராக சஞ்சய் பணியாற்றி வந்தான். சம்பவத்தன்று மருத்துவமனையில் பணியில் இருந்தான். நைட் டூட்டியில் தனிமையில் இருந்த பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றான். இந்த வழக்கில் விசாரணை கடந்த 9ம் தேதி முடிந்த நிலையில், சீல்டா கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி அனிர்பன் தாஸ் இன்று தீர்ப்பு வழக்கினார். கோர்ட் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான். அவனுக்கு மரண தண்டனை விதிக்க கோரி கோர்ட்டுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரங்கள் திங்களன்று மதியம் அறிவிக்கப்படும் எனக்கூறினார். அப்போது சஞ்சய் ராய், நாம் நிரபராதி என்றும், தம் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக கூறினான். நான் இதை செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருக்கிறது. நான் எப்போதும் கழுத்தில் ருத்ராட்சை மாலை அணிவேன். நான் குற்றம் செய்து இருந்தால் அந்த இடத்திலேயே என் சங்கிலி அறுபட்டு இருக்க கூடும். என்னால் இந்த குற்றத்தை செய்யவில்லை என சஞ்சய் கூறினான். எனினும், சஞ்சய்யை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, திங்களன்று தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் பேச வாய்ப்பு தரப்படும் எனக்கூறினார். கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்ற, பெண் டாக்டரின் தாய், மற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறினார். இந்த வழக்கில் சஞ்சய் ராய்க்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்குமாறு சிபிஐ கோரி உள்ளது.

ஜன 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி