உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மையில் சயீப் அலிகானை குத்தியது யார்? பரபரப்பு தகவல் | saif ali khan case | Who is Mohammad Sajjad

உண்மையில் சயீப் அலிகானை குத்தியது யார்? பரபரப்பு தகவல் | saif ali khan case | Who is Mohammad Sajjad

உண்மையில் சயீப் அலிகானை குத்தியது யார்? பரபரப்பு தகவல் | saif ali khan case | Who is Mohammad Sajjad மகாராஷ்டிராவில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை இரு நாட்களுக்கு சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் நேற்று கைது செய்தனர். மும்பை பாந்த்ராவில், சத்குரு ஷரண் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வயது 54, வசித்து வருகிறார். சயீப் அலி கான் வீட்டுக்குள் கடந்த 16ம் தேதி அதிகாலை புகுந்த மர்ம நபர், அவரை ஆறு முறை கத்தியால் குத்தி தப்பி ஓடினார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த சயீப் அலிகான், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின், நடிகர் சயீப் அலிகான் உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பை பற்றி நன்கறிந்த நபர், நடிகர் சயீப் அலி கானை கத்தியால் குத்தி தப்பி ஓடியதாகவும், அவரது வீட்டில் அந்த நபர் 30 நிமிடங்கள் வரை இருந்ததாகவும், 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர். குடியிருப்பின் ஆறாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், மர்ம நபரின் முகம் பதிவானது. இதனடிப்படையில் சந்தேகத்துக்குரிய நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும், அந்த நபரின் புகைப்படத்தை ரயில்வே போலீசாருக்கு மும்பை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மும்பையின் லோக்மான்ய திலக் முனையம்-மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே இயங்கும் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேக நபர் பயணிப்பதாக, மும்பை போலீசாருக்கு நேற்று மதியம் 12:30 மணிக்கு தகவல் கிடைத்தது. அப்போது, சத்தீஸ்கரின் துர்க் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், அது குறித்து துர்க் ரயில்வே போலீசாருக்கு மும்பை போலீசார் தகவல் அளித்தனர். இதன்படி, துர்க் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேக நபரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை முறைப்படி கைது செய்து மும்பைக்கு அழைத்து வர துர்க்குக்கு போலீசார் சென்றுள்ளனர். இது குறித்து மும்பை போலீசார் கூறுகையில், கைதானவர் பெயர் ஆகாஷ் கைலாஷ் கன்னோஜியா வயது 31. சந்தேகத்தின்படி கைது செய்துள்ளோம். உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் இதுவரை அவர் சந்தேக நபர் தான் என்றனர். இதற்கிடையே நேற்று, இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சயீப் அலிகானின் மனைவி கரீனா கபூர் உட்பட 30க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அடுத்த சில மணி நேரங்களில் தானேயில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். அவர் தான் ஒரிஜினல் குற்றவாளி என்று பின்னர் போலீசார் கூறினர். அந்த நபர் பெயர் தனது பெயரை பிஜோய் தாஸ் என்று கூறினார். விசாரணையில் அவர் முகமது சஜ்ஜத் என்பது தெரியவந்தது. சயீத் அப்பார்ட்மென்ட்டில் முன்பு முகமத சஜ்ஜத் வேலை பார்த்துள்ளான். அவனுக்கு எல்லா இடமும் அத்துப்படி. அவன் தான் கத்தியால் குத்தியது என்பதை உறுதி செய்து விட்டோம். காய்ந்து போன புதரில் தூங்கிக்கொண்டிருக்கும் போது கைது செய்தோம் என்று போலீசார் கூறினர். மற்ற விவரங்களை உடனடியாக தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ