ஊழியர் போல வந்து 4 பவுன் நகை திருட்டு | Tiruvallur | Government Hospital | theft
ஊழியர் போல வந்து 4 பவுன் நகை திருட்டு | Tiruvallur | Government Hospital | theft திருவள்ளூர் கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜீகாந்தம் வயது 69. இடது கையில் பாதிப்பு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இன்று சிகிச்சைக்கு பின் பகல் 1.30 மணி அளவில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் டாக்டர் அழைப்பதாக கூறி ராஜீவை அழைத்து சென்றுள்ளார். உங்க ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என கூறி கையில் பேப்பர் அட்டை, பேனாவுடன் பக்காவாக வந்து கைநாட்டு வாங்கினார். தொடர்ந்து டாக்டர் ஸ்கேன் எடுக்க சொன்னார் என கூறி ஸ்கேன் செய்யும் அறைக்கு அருகே உள்ள மாடிப்படிக்கு அழைத்து சென்றார். அங்கு ஸ்கேன் எடுப்பதற்கு முன் நகையை கழட்ட வேண்டும் என கூறி ராஜுவின் 4 பவுன் நகையை வாங்கி கொண்டு அங்கிருந்து நைஸாக நழுவி உள்ளார். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி கூச்சலிட்டும் பயனில்லை. அந்த இளைஞர் மாயமானார். கேட் அருகே உள்ள கான்ஸ்டபிளிடம் நடந்த சம்பவத்தை ராஜு கூறி உள்ளார். திருவள்ளூர் டவுண் போலீசார் நகை பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.