உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணரின் புனித பூமியை மீட்கும் குஜராத் | Dwarka | Rukmini temple

கிருஷ்ணரின் புனித பூமியை மீட்கும் குஜராத் | Dwarka | Rukmini temple

கிருஷ்ணரின் புனித பூமியை மீட்கும் குஜராத் | Dwarka | Rukmini temple இந்தியாவில் உள்ள மிக புனிதமான நகரங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தின் துவாரகா. மகாபாரத காலத்தில் பகவான் கிருஷ்ணர் துவாரகா நகரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். அவர் துவாரகாவில் இருந்து வெளியேறியதும் அந்த நகரம் கடலில் மூழ்கியதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2007ல் இந்திய தொல்லியல் துறை கடலுக்கு அடியில் துவாரகா நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. கடலுக்கு அடியில் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய துறைமுகமாக துவாரகா இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் கல் நங்கூரங்கள் கிடைத்தன. பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கல் அமைப்பு, வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இப்படிப்பட்ட வரலாற்று தென்மை வாய்ந்த துவாரகாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. அங்கு சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. குஜராத் கடல்சார் வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஹஸ்ரத் பஞ்ச் பீர் தர்காவை அதிகாரிகள் இடித்தனர். துவாரகாவில் விதிமீறி கட்டப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகளும் இடிக்கப்பட்டு அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் பூமியாக துவாரகா உள்ளது. கிருஷ்ணாவின் நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை அனுமதிக்க மாட்டோம். நமது நம்பிக்கையையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது நமது பொறுப்பு என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். துவாரகாவில் ஆக்கிரமிப்புகளை மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 1,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நடவடிக்கையை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை