உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அந்தரத்தில் நிற்கும் பாறையை உடைக்கும் பணி தீவிரம்! | Tiruvannamalai | rock

அந்தரத்தில் நிற்கும் பாறையை உடைக்கும் பணி தீவிரம்! | Tiruvannamalai | rock

அந்தரத்தில் நிற்கும் பாறையை உடைக்கும் பணி தீவிரம்! | Tiruvannamalai | rock கடந்த ஆண்டு டிசம்பரில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறை உருண்டு வஉசி நகர், 11வது தெருவில் ஒரு வீட்டின் மீது விழுந்து 7 பேர் பலியாகினர். 20 வீடுகள் சேதமடைந்தது. 40 டன் எடை கொண்ட மற்றொரு பாறை மலையிலிருந்து உருண்டு வஉசி நகர் 9வது தெரு மலை அடிவாரத்தில் குறைவான பிடிமானத்துடன் அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. நேரில் ஆய்வு செய்த அமைச்சர் வேலு பாறையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்படி திருச்சியை சேர்ந்த பாறை உடைக்கும் நிபுணர் குழுவினர், பவர் டிரில்லர் மற்றும் ராக் கிராக் என்ற அமிலத்தை பயன்படுத்தி பாறையை தூளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி 5 நாட்கள் வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணியின் போது பாறைகள் உருண்டோடி பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க இரும்புத் தகடுகள் போட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை