இந்தியா-சீனா தலைவர்கள் திடீர் சந்திப்பு ஏன்? India China meeting | kailash mansarovar | Vikram Misri
இந்தியா-சீனா தலைவர்கள் திடீர் சந்திப்பு ஏன்? India China meeting | kailash mansarovar | Vikram Misri 2020 மே மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இந்தியா, சீனா எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீன வீரர்கள் தாக்கியதில் நம் வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். பதிலுக்கு நம் வீரர்கள் அடித்ததில் 43 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலால் சீன, இந்திய உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டது. எல்லையிலும் தொடர்ந்து பதற்றம் நிலவியது. கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடந்த மீட்டிங்கில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்தனர். இதையடுத்து மீண்டும் இந்தியா, சீனா உறவு புதுப்பிக்கப்பட்டது. எல்லையில் குவித்த வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர். இந்த நிலையில் தான் இந்தியா, சீனா தலைவர்கள் இடையே மீண்டும் ஒரு முக்கிய சந்திப்பு நடந்துள்ளது. 2 நாள் பயணமாக நம் நம் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி சீனாவுக்கு சென்றார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை பீஜிங்கில் சந்தித்து பேசினார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியது: இந்தியா, சீனா விவகாரங்களில் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி உறவை மேம்படுத்த வேண்டும். பரஸ்பர சந்தேகங்களுக்கு பதிலாக, பரஸ்பர புரிதலுக்கு நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். முக்கிய விவகாரங்களில் ஒருவரையொருவர் நம்ப வேண்டும். சீனா-இந்தியா உறவு முன்னேற்றம் அடைவது இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும் உலகளாவிய தெற்கு நாடுகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும் உகந்தது. மேலும், இரு நாடுகளின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானது என்றார். இந்த சந்திப்பின் போது 2 முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. முதல் விஷயம் இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமானம் இயக்கலாம் என்பது. கோவிட் பாதிப்புக்கு பிறகு இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் நேரடி விமானம் இயக்கப்பட உள்ளது. இன்னொன்று கைலாஷ் மானோசரவர் யாத்திரை. இதுவும் கோவிட்டுக்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்த யாத்திரைக்கும் இப்போது சீனா அனுமதி அளித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உயரமான கைலாஷ் மலை உள்ளது. புனிதமான இந்த மலைக்கு சிவபக்தர்கள் யாத்திரை சென்று வந்தனர். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த தடை இப்போது சீன, இந்திய தலைவர்கள் சந்திப்பால் முடிவுக்கு வந்து விட்டது.