ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட்! ISRO's 100th launch
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட்! ISROs 100th launch | GSLV-F15 | NVS-02 விண்வெளி துறையில் உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை விண்ணில் ஏவியது. காலை 6.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து என்.வி.எஸ்-02 செயற்கைக்கோளை சுமந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு, இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. 2,250 கிலோ எடையும், 10 ஆண்டுகள் ஆயுட்காலமும் கொண்ட இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் ஜி.பி.எஸ். சேவை அளிப்பதற்கான என்.வி.எஸ்.01 என்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும். இந்த NVS - 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும்.