உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டம் இதழை படித்து பரிசுகளை அள்ளிய மாணவர்கள்! Dinamalar | Pattam | Quiz Competition

பட்டம் இதழை படித்து பரிசுகளை அள்ளிய மாணவர்கள்! Dinamalar | Pattam | Quiz Competition

பட்டம் இதழை படித்து பரிசுகளை அள்ளிய மாணவர்கள்! Dinamalar | Pattam | Quiz Competition பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களிடம் கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. பட்டம் இதழ் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் மாணவர்கள் போட்டி போட்டு பங்கேற்று பரிசுகளை தட்டி சென்றனர். கிழக்கு தாம்பரம் சங்கர வித்யாலயா பள்ளியை சேர்ந்த ஸ்ரீவத்ஸகுமார், அனன்யா முதல் பரிசை தட்டி சென்றனர். பட்டம் நாளிதழை பிரித்து படித்து, கடந்த முறை செய்த தவறுகளை திருத்தி கொண்டதால் முதல் பரிசு பெற முடிந்ததாக மாணவர்கள் கூறினர். திருத்தணி சுதந்திரா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சான்வி, ரிஷதா பிரியா இரண்டாவது பரிசு பெற்றனர். நிகழ்ச்சிக்காக 3 மாதங்கள் பயிற்சி எடுத்து, பதட்டத்தை தவிர்த்து கொண்டதால் பரிசு பெற முடிந்தது என்று அவர்கள் கூறினர். கவரப்பேட்டை ஆர்எம்கே பள்ளி மாணவிகள் லோகேஸ்வரி, சஞ்சனா மூன்றாம் பரிசு பெற்றனர். பட்டம் நாளிதழ் படிக்க துவங்கியதில் இருந்து வரலாறு தகவல்களை அதிகளவில் தெரிந்து கொள்ள முடிவதாக மாணவிகள் கூறினர்.

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை