Operation Sindoor பிறகு அரசின் மீது நம்பிக்கை அதிகரிப்பு | global optimism index | India
Operation Sindoor பிறகு அரசின் மீது நம்பிக்கை அதிகரிப்பு | global optimism index | India காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ராணுவ நடவடிக்கை மூலம் ஒன்பது பயங்கரவாத தளங்களில் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத குழுக்கள் நிலைகுலைந்து போயின. இந்த தாக்குதலுக்கு பிறகு உலகலாவிய நம்பிக்கை குறியீட்டில் இந்தியா முன்னேறி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்ஸோஸ் (Ipsos) அமைப்பு மே மாதம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மக்களுக்கு இந்திய அரசின் மீதான நம்பிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் 62 சதவிகிதமாக இருந்த மக்கள் நம்பிக்கை மே மாதம் 3 புள்ளிகள் அதிகரித்து 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நம்பிக்கை குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொட்ர்ந்து இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் 77 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து மலேசியா 69 சதவீதம், இந்தோனேசியா 67 சதவீதம் என்கிற அளவில் உள்ளது. ஆய்வில் பங்கேற்ற இந்தியர்களில் 65 சதவீதம் பேர் நாடு சரியான திசையில் செல்கிறது என்று தெரிவித்துள்ளனர். இது உலக நாடுகளின் மொத்த சராசரியான 37 சதவிகிதத்துடன் ஒப்பிடும் போது அதிகமாகும். வளர்ந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் அந்நாட்டு அரசு மீது மக்களுக்கு அவநம்பிக்கை நிலவுகிறது. பிரான்ஸ், தென் கொரியா மற்றும் பெரு ஆகியவை கடைசி இடத்தில் உள்ளன. அந்நாட்டு மக்கள் தங்கள் நாடு தவறான பாதையில் செல்கிறது என சொல்கின்றனர். 19 சதவீதம் மட்டுமே தங்கள் நாடு சரியான பாதையில் செல்வதாக பிரான்ஸ் மக்கள் கூறுகிறார்கள். இது தென் கொரியாவில் 15 சதவீதம் மற்றும் பெருவில் 9 சதவீதமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.