உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருத்து கேட்பில் 80% பேர் ஆதரவு; கட்சி பெயர் அறிவித்தார் மஸ்க் elon musk new party| US president tru

கருத்து கேட்பில் 80% பேர் ஆதரவு; கட்சி பெயர் அறிவித்தார் மஸ்க் elon musk new party| US president tru

கருத்து கேட்பில் 80% பேர் ஆதரவு; கட்சி பெயர் அறிவித்தார் மஸ்க் elon musk new party| US president trump அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, டிரம்பின் குடியரசு கட்சிக்கு 2,500 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார். டிரம்ப் நிர்வாகம் தன் தொழில்களுக்கு சாதகமாக இருக்கும் என எலான் மஸ்க், எண்ணிய நிலையில், சமீபத்தில் புதிய சட்ட மசோதாவை டிரம்ப் அரசு கொண்டு வந்தது. அதில் மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகை ரத்து, அரசின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன. தன் தொழில்களை பாதிக்கும் இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார். மேலும், டிரம்ப் அரசை நேரடியாக விமர்சிக்க துவங்கினார். பதிலுக்கு டிரம்பும், மஸ்க் நிறுவனத்துக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், மானியங்களை நிறுத்துவேன் என மிரட்டல் விடுத்தார். அதன் பின், தன் சமூக வலைதள பக்கத்தில் 80 சதவீத நடுநிலை மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புதிய கட்சி தேவையா? என கருத்து கணிப்பு நடத்தினார். இதில், 56.30 லட்சம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதிலும் சரியாக 80 சதவீதம் பேர் புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த முடிவுகளை பார்த்து ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க், மக்கள் கருத்துக்களை கூறிவிட்டனர். இது தான் விதி என கூறியவர், கட்சிக்கு தி அமெரிக்கா பார்ட்டி என்ற பெயரை சமூக வலைதளத்தில் நேற்று அறிவித்தார்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை