உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகனால் கத்தி குத்து பட்ட தாய் ஆஸ்பிடலில் அட்மிட் | Mother - son conflict | Property issue | Mother a

மகனால் கத்தி குத்து பட்ட தாய் ஆஸ்பிடலில் அட்மிட் | Mother - son conflict | Property issue | Mother a

மகனால் கத்தி குத்து பட்ட தாய் ஆஸ்பிடலில் அட்மிட் | Mother - son conflict | Property issue | Mother attacked | Tiruvarur | திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, வடகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி, வயது 64. கணவர் காசிநாதன் இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரின் 2 மகன்கள், ஒரு மகளும் திருமணமாகி தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். இதில் 38 வயதான மூத்த மகன் சதீஷ்குமார், சாவித்ரி வீட்டின் அருகிலேயே குடும்பத்துடன் தனி வீட்டில் இருக்கிறார். அப்படி இருந்தும் சாவித்ரி இருக்கும் வீட்டை தனக்கு கொடுக்குமாறு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் குடித்துவிட்டு அம்மா வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார், வீட்டை கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சதீஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாவித்திரியை ஆவேசமாக குத்தியுள்ளார். சாவித்ரி அலறிக்கொண்டே தடுத்துள்ளார். இருப்பினும் அவரது வயிறு கை உள்ளிட்ட இடங்களில் கத்தி குத்து பட்டு படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், சதீஷ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார். உறவினர்கள் சாவித்திரியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த குடவாசல் போலீசார், தலைமறைவாக உள்ள சதீஷ்குமாரை தேடுகின்றனர்.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !