உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஐஐடி அருகே அதிகாலையில் சம்பவம் | Lorry Accident | Chennai IIT

சென்னை ஐஐடி அருகே அதிகாலையில் சம்பவம் | Lorry Accident | Chennai IIT

சென்னை ஐஐடி அருகே அதிகாலையில் சம்பவம் | Lorry Accident | Chennai IIT சென்னை கிண்டி ஐஐடி அருகே அதிகாலை 3.30க்கு கன்டெய்னர் லாரி சென்றது. வழக்கத்தை விட அதிக உயரம் கொண்ட கன்டெய்னர் அதில் இருந்தது. இதனால் தாழ்வாக சென்ற வயர்கள் கன்டெய்னர் மேல் சிக்கிக்கொண்டது. டிரைவர் அப்படியே லாரியை இயக்கியதால் வயர்கள் அறுந்து ரோட்டில் விழுந்தது. கன்டெய்னர் உரசியதில் ஒரு மின் விளக்கு கம்பமும் சரிந்தது. அப்போது ரோட்டில் தூய்மை பணியில் இருந்த ஊழியர் ஓடி சென்று தப்பித்தனர். இதையடுத்து தாறுமாறாக சென்று கொண்டிருந்த லாரியை டிராபிக் போலீசார் மடக்கி பிடித்தனர். ரோட்டில் சரிந்து கிடந்த மின் விளக்கினை போலீசாரே அப்புறப்படுத்தினர். இதனால் அதிகாலையில் கிண்டி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை