விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ₹1.47 கோடி வரை இழப்பீடு | Air india flight crash
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ₹1.47 கோடி வரை இழப்பீடு | Air india flight crash | Ahmedabad | Insurance claim | Biggest of century | ₹1,000 Crore குஜராத்தின் ஆமதாபாதில் 260 உயிர்களை பலி வாங்கிய விமான விபத்து அவர்களது குடும்பத்தின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவன விமானம், இப்போது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. ஆமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் 2013ம் ஆண்டின் போயிங் 787 மாடல். இது, 2021ல் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 978 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மான்ட்ரில் ஒப்பந்தம் - 1999ன் படி, விபத்தில் இறந்த ஒவ்வொரு பயணிக்கும் தலா 1.47 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர விமானம் மெடிக்கல் காலேஜ் விடுதியில் மோதியதில் பலர் இறந்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஆண்டுதோறும் 300 விமானங்களுக்கு 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெற்றுள்ளது. இந்த பாலிசி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ல் புதுப்பிக்கப்படுகிறது. இப்போது விபத்துக்குள்ளான ட்ரீம்லைனர் விமானம் ஒன்றிற்கு, அதிகபட்சமாக 2,380 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் செய்துள்ளது. உள்நாடு மட்டுமின்றி சர்வதேச இன்சூரன்ஸ் நிறுவனங்களுடனும் ஏர் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பும் இணைந்தே, விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும். ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் வரை இன்சூரன்ஸ் கிளைம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் கேரளாவின் கோழிக்கோடு விமான விபத்தில், 585 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கிளைம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆமதாபாத் விமான விபத்து நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என தெரியவந்துள்ளது.