அறுபடை வீடு கண்காட்சி கோலாகல துவக்கம்! Murugan Maanadu Madurai | Aarupadai Veedu Expo | Thiruparank
அறுபடை வீடு கண்காட்சி கோலாகல துவக்கம்! Murugan Maanadu Madurai | Aarupadai Veedu Expo | Thiruparankundram மதுரையில் வருகிற 22ம் தேதி பாஜ, இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதையொட்டி அங்குள்ள திடலில் அறுபடை முருகனின் மாதிரி கண்காட்சி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை கோயில்களின் கோபுரங்களுடன் முகப்பு தோற்றம், பிரகாரம், மூலவர் சன்னதி ஆகியவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு, வேல் மற்றும் முருகன் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளின் சிறப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் துவங்கி வைத்தனர். தொடர்ந்து முருகன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திரண்டு வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமச்சிவாயம், முருக பக்தர்கள் மாநாடு அரசியல் சார்பற்றது, அரசியல் உள்நோக்கம் இல்லாதது என கூறினார்.