உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1 மாதமாக குடிநீர் வராததால் லெப்ட் ரைட் வாங்கிய மக்கள் Public Fight With Officers | Road Roko | Thiru

1 மாதமாக குடிநீர் வராததால் லெப்ட் ரைட் வாங்கிய மக்கள் Public Fight With Officers | Road Roko | Thiru

1 மாதமாக குடிநீர் வராததால் லெப்ட் ரைட் வாங்கிய மக்கள் Public Fight With Officers | Road Roko | Thiruvarur திருவாரூர் அருகே வண்டாம்பாலை கீழத்தெருவில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியில் பராமரிப்பு செய்வதாக கூறி குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. 1 மாதம் ஆகியும் பராமரிப்பு பணி நடக்கவில்லை; குடிநீர் வியோகமும் இல்லை. குடிநீருக்காக மக்கள் அல்லாடினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் வண்டாம் பாலை கிராமத்தில் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டு கடும் வாக்குவாதம் செய்தனர். மேல்நிலை தொட்டியில் பராமரிப்பு பணி முடித்து விரைவில் குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை