உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜி7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியில் கிளம்பியது ஏன்? donald trump| US president

ஜி7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியில் கிளம்பியது ஏன்? donald trump| US president

ஜி7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியில் கிளம்பியது ஏன்? donald trump| US president| Emmanuel Macron| iran israel war கனடாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்--ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. இச்சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், திடீரென மாநாட்டில் இருந்து பாதியிலேயே அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவர் கிளம்புவதற்கு முன்பாக, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நான் சொன்ன ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்து போடாததை ஒருபோதும் ஏற்க முடியாது. டெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறுங்கள் என கூறியிருந்தார். இதனால், இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானை தாக்குமா? என்ற யூகங்கள் எழுந்தன. இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்த்தை ஏற்படுத்தவே அதிபர் டிரம்ப் மாநாட்டில் இருந்து அவசரமாக சென்றதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறினார். மேக்ரான் கருத்துக்கு அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார். விளம்பரத்தை விரும்பும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், நான், இஸ்ரேல்- ஈரான் போரை நிறுத்துவதற்காகத்தான் மாநாட்டில் இருந்து வாஷிங்டனுக்கு கிளம்பியதாக தவறாக சொல்லி இருக்கிறார். நான் எதற்காக வாஷிங்டனுக்கு செல்கிறேன் என்பதற்கான காரணம் பற்றி அவருக்கு தெரியாது. நான் செல்வதற்கும் போர் நிறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, அதை விட மிகப்பெரிய விஷயம். வேண்டுமென்றே செய்தாலும், இல்லையென்றாலும், இமானுவல் எப்போதும் தவறாகவே புரிந்து கொள்கிறார். காத்திருங்கள் என்று அதிபர் டெனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை