ஆபத்தில்லாமல் அதிக பாதுகாப்பானது விமான பயணம் தான் | Air india flight crash
ஆபத்தில்லாமல் அதிக பாதுகாப்பானது விமான பயணம் தான் | Air india flight crash | Aircraft safety | Airforce former officers | குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து கடந்த 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இண்டியா விமானம் விபத்தில் சிக்கியது. டேக் ஆன முப்பதே விநாடிகளில் விழுந்து வெடித்து சிதறியதில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரை தவிர அனைவரும் பலியாகினர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை பைலட் உணர்ந்து ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த மிக குறைந்த நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விபத்துக்கான காரணம் பற்றி பல யூகங்கள் சொல்லப்படும் நிலையில், அடுத்தடுத்து அரங்கேறும் வமான கோளாறு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் விமான பயணம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சொல்லும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகள், அதற்கான காரணத்தை தொழில்நுட்ப ரீதியாக விளக்குகின்றனர்.