எங்கள் நோக்கம் இதுதான்; கமேனிக்கு இஸ்ரேல் குறி isreal Defense Minister Katz| khamenei
எங்கள் நோக்கம் இதுதான்; கமேனிக்கு இஸ்ரேல் குறி isreal Defense Minister Katz| khamenei| isreal iran conflict இஸ்ரேல் ஈரான் இடையே 7 வது நாளாக தாக்குதல் தொடர்கிறது. இஸ்ரேலின் பீர் ஷெபாவில் 1000 பெட்கள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் சக்திவாய்ந்த செஜ்ஜில் ஏவுகணை வீசி தாக்கியது. இது இஸ்ரேல் கோபத்தை மேலும் தூண்டியது. யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அரேபியர்கள் என அனைத்து மக்களும் சிகிச்சை பெறும் மருத்துவமனையை ஈரான் தாக்கியிருப்பதாக கூறியது. இஸ்ரேல் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் Isreal KatZ கூறும்போது, ஈரானின் மதத்தலைவர் கமேனி பாதுகாப்பான பதுங்கு குழியில் இருந்து கொண்டு, மருத்துவமனைகள், மக்கள் வசிக்கும் இடங்களை வேண்டுமென்றே தாக்கி வருகிறார். இது மிகவும் மோசமான போர் குற்றம். கோழைத்தனமான ஈரானிய தலைவர் கமேனி தான் இதற்கெல்லாம் பொறுப்பு. ஈரானின் சர்வாதிகாரி போல் தலைமை வகிக்கும் கமேனி, இஸ்ரேலை அழிப்பதைதான் இலக்காக கொண்டிருக்கிறார். அந்த கொடூரமான இலக்கை அனுமதிக்க முடியாது. கமேனியை கண்டுபிடித்து அழிக்கும் திறன் இஸ்ரேல் படைக்கு இருக்கிறது. எங்கள் படைகளை அனுப்பி அவரை ஒழித்திருப்போம். இப்போது நடப்பதை பார்க்கும்போது, கமேனி நவீன ஹிட்லர் ஆக இருக்கிறார். இஸ்ரேலை அழிக்கும் நோக்கத்தோடுதான், மருத்துவமனைகள் வீடுகள் உள்ள இடங்களில் தாக்குதல் நடத்த அவர் உத்தரவிடுகிறார். ஈரான் உடனான மோதலின் நோக்கம், அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவது, அழிவின் ஆதரங்களை அழிப்பது தான். இந்த நோக்கங்களை அடைய வேண்டுமானால், கமேனி இனி இருக்கவே கூடாது. ஈரானில் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அரசு தொடர்பான இலக்குகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் படைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரேல் ராணுவ அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்.