பொய்யை நம்பி திருமணம் செய்த கணவனுக்கு நேர்ந்த கதி | Husband murder | Wife arrested | Illegal affair
பொய்யை நம்பி திருமணம் செய்த கணவனுக்கு நேர்ந்த கதி | Husband murder | Wife arrested | Illegal affair | Telangana | நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை போன்ற ஒரு சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர், வயது 32. தனியார் சர்வேயராக வேலை செய்கிறார். கடந்த பிப்ரவரி 13ல் ஆந்திராவின் கர்னூலை சேர்ந்த ஐஸ்வர்யாவுடன் தேஜேஷ்வருக்கு நிச்சயம் நடந்தது. மே 18ல் திருமணம் முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு 5 நாட்கள் இருந்தபோது ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். அவர், கர்னூலில் உள்ள பிரபல வங்கி ஊழியரை காதலிப்பதாகவும், ஐஸ்வர்யா அவரிடம் சென்றுவிட்டதாகவும் அனைவரும் நினைத்தனர். ஆனால் 2 நாட்கள் கழித்து அதாவது மே 16ம் தேதி வீடு திரும்பிய ஐஸ்வர்யா, தேஜேஷ்வருடன் செல்போனில் பேசினார். தான் யாரையும் காதலிக்கவில்லை; வரதட்சணை கொடுக்க தாய் படும் சிரமத்தை தாங்க முடியாமல் தோழியின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று கூறி அழுதிருக்கிறார். இதை நம்பிய தேஜேஷ்வர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். பெற்றோர் மறுத்த போதும், அவர்களை சமாதானப்படுத்தி, நிச்சயிக்கப்பட்ட மே 18 அன்று ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த 2 நாட்களிலேயே ஐஸ்வர்யா தேஜேஷ்வரை புறக்கணித்து தொடர்ந்து செல்போன் பேசுவதில் மூழ்கி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், ஜூன் 17 அன்று தேஜேஷ்வர் திடீரென காணாமல் போனார். அங்கு தேடியும் கிடைக்காததால் அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பல இடங்களில் தேடிய நிலையில் 5 நாட்களுக்கு பின் நேற்று ஆந்திராவின் பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டா என்ற இடத்தில் தேஜேஷ்வரின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். தேஜேஷ்வரின் குடும்பத்தினர் ஐஸ்வர்யா மீது சந்தேகம் தெரிவித்தனர். இதனால் போலீசார் ஐஸ்வர்யாவையும் அவரது தாயார் சுஜாதாவையும் விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்தன. ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதா கர்னூலில் உள்ள ஒரு முக்கிய வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்கிறார். அதே வங்கியில் பணிபுரியும் ஊழியருடன் சுஜாதாவிற்கு தவறான உறவு இருந்துள்ளது. இந்த உறவின் மூலம் அந்த வங்கி ஊழியர் படிப்படியாக ஐஸ்வர்யாவையும் வளைத்து போட்டுள்ளார். இதனால் தங்கள் உறவுக்கு தடையாக இருந்த தேஜேஷ்வரை கொல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக வங்கி ஊழியர் சிலருக்கு பணம் கொடுத்தது மட்டுமல்லாமல், அவர்களுடன் அவரது டிரைவரையும் அனுப்பி உள்ளார். முன்கூட்டியே திட்டமிட்டபடி, அந்த கும்பல் ஜூன் 17 அன்று தேஜேஸ்வரை சந்தித்தனர். 10 ஏக்கர் நிலத்தை வாங்க இருப்பதால் அதை நில அளவை செய்ய வேண்டும் எனக்கூறி, கட்வாலில் ஒரு காரில் அவரை அழைத்து சென்றனர். பின்னர் காருக்குள்ளேயே வைத்து கத்திகளால் தேஜேஸ்வரை தாக்கி, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை ஆந்திராவின் பன்யம் அருகே உள்ள சுகலிமெட்டுவில் வீசியதாகவும் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. தேஜேஷ்வரை திருமணம் செய்த பிறகு ஐஸ்வர்யா வங்கி ஊழியரிடம் 2,000 முறை பேசிய கால் ரெக்கார்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஐஸ்வர்யா, சுஜாதாவுடன் தேஜேஸ்வரின் கொலையில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியரையும் தேடுகின்றனர்.