தூய்மை பணியாளர்களை கதற விடும் பெண் அதிகாரி | Woman officer | Bribe issue | Cleaning labours | Chenna
தூய்மை பணியாளர்களை கதற விடும் பெண் அதிகாரி | Woman officer | Bribe issue | Cleaning labours | Chennai | சென்னை மண்டலம் நான்குக்கு உட்பட்ட 47வது வார்டில் தூய்மை பணியாளர்கள் உட்பட 60 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து அந்த வார்டின் சிஐ அதிகாரி லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. 1500 முதல் 5,000 ரூபாய் வரை கமிஷன் தராவிட்டால் வேலை கிடையாது என பெண் அதிகாரி ராமதேவி மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் கொடுக்கும் வேலைக்கும் கறாராக கமிஷன் கேட்பதால் விரக்தியடைந்த பணியாளர், அதிகாரி மிரட்டுவதை செல்போனில் ரெக்கார்டு செய்து வெளியிட்டது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.