ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குள் புகுந்து கிளப்பிய பீதி | Karur | Train | Bomb Alert
ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்குள் புகுந்து கிளப்பிய பீதி | Karur | Train | Bomb Alert கரூர் மாவட்டம் புலியூர் அருகே வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு நேற்று மாலை 3 மணிக்கு வந்த நபர் பரபரப்புடன் காணப்பட்டார். திடீரென ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நுழைந்தார். சேலத்தில் இருந்து கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருக்கிறது. என்னை உடனே திருச்சி அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள் கரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மதியம் 3.30க்கு கரூர் வந்த ரயிலில் ஏறிய போலீசார் சல்லடை போட்டு தேடினர். வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அதே ரயிலில் ஏறி வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன் சென்றனர். வெடிகுண்டு இருப்பதாக சொன்ன நபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருச்சி தென்னூரை சார்ந்த கலீல் அஹமது என்பது தெரியவந்தது. கரூர் பள்ளபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீரராக்கியம் வந்துள்ளார். அவரிடம் வெடிகுண்டு புரளி கிளப்பியது குறித்து போலீசார் விசாரித்தனர். பதில் எதுவும் சொல்லாமல் சம்பந்தம் இல்லாமல் பேசியுள்ளார். கலீல் அஹமதுவை கைது செய்த போலீசார் கரூர் அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.