2023ல் இஸ்ரேலை தாக்கியதில் மூளையாக இருந்தவர் இஸ்ஸா Hamas co-founder |killed |gaza |Israel vs Hamas|
2023ல் இஸ்ரேலை தாக்கியதில் மூளையாக இருந்தவர் இஸ்ஸா Hamas co-founder |killed |gaza |Israel vs Hamas| 2023ம் ஆண்டு அக்டோபர் 7ல் இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து பாலஸ்தீன பகுதியான காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு உதவியாக வந்த ஏமனைச் சேர்ந்த ஹவுதிஸ் அமைப்பினரும் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நிலை குலைந்த இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இணை நிறுவனர் ஹகம் முகமது இஸ்ஸா அல்-இஸ்ஸா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் இணை நிறுவனர் முகமது இஸ்ஸா, 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர். ஹமாஸின் ராணுவ திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்தவர். ஹமாஸ் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் அகாடமியை நிறுவி அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் இவர்தான் முன்னின்று நடத்தி வந்தார். இஸ்ரேல் நடத்திய நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், முகமது இஸ்ஸாவுடன் அவருடைய மனைவி, பேரப் பிள்ளைகளும் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது. கடந்த மே மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார். அதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த அவருடயை சகோதரர், கடந்தாண்டு இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இப்போது அந்த அமைப்பின் இணை நிறுவனரும் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.